உள்ளூர் செய்திகள்

மலைப்பாதையில் 40 கொண்டைஊசி வளைவுகளிலும் பாதுகாப்பு ரப்பர் வளையங்கள்

Published On 2024-05-20 04:37 GMT   |   Update On 2024-05-20 04:37 GMT
  • பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
  • வாகனங்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த ரப்பர் வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறையில் எண்ணற்ற தேயிலை தோட்டங்களும், ஆறுகளும் நிறைந்து காணப்படுகிறது. இந்த இயற்கை காட்சிகளை கண்டுகளிப்பதற்காக வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

தற்போது கோடைகாலம் என்பதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் தேயிலை தோட்டங்களை சுற்றி பார்த்து விட்டு, ஆறுகளிலும் குளித்தும் வருகின்றனர்.

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கோடை சீசனையொட்டி வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதால், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை சீரமைப்பு, விரிவாக்கம், தகடுகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் கடந்த காலங்களை ஒப்பிடும்போது வால்பாறை மலைப்பாதையில் விபத்துக்கள் வெகுவாக குறைந்துள்ளன. இந்த நிலையில் வால்பாறை மலைப்பாதையில் உள்ள 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் அமைக்கப்பட்டுள்ள தகடுகளுக்கு இடையே தற்போது ரப்பர் வளையங்கள் அமைத்துள்ளனர்.

வாகனங்கள் தகடுகள் மீது மோதினால் வாகனங்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த ரப்பர் வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் ரப்பரில் உள்ள மஞ்சள் நிறம் வெளிச்சத்தை கொடுப்பதோடு கொண்டை ஊசி வளைவுகளையும் அலங்கரித்துள்ளது.

Tags:    

Similar News