ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தில் புனித அந்தோனியார் சப்பரபவனி
- புனித அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- சப்பரபவனியில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடைக்கலாபுரம் புனித சூசையப்பர் அறநிலைய குரு செட்ரிக் பீரிஸ் அடிகளார் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பெரியதாழை உதவி பங்குதந்தை கிங்ஸ்லின் மறையுறை நிகழ்த்தினார்.விழா நாட்களில் தினசரி மாலையில் திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தன.
12-ந் நாளான நேற்று காலை ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாய்சியஸ் உரை நிகழ்த்தினார். தூத்துக்குடி ஆயர் இல்ல பொருளாளர் சகாயம் மாலை ஆராதனையை நடத்தினார். தூத்துக்குடி திருஇருதயங்களின் பேராலய பங்கு தந்தை ரோலிங்டன் உரை நிகழ்த்தினார். இரவில் புனித அந்தோணியார் சொரூப சப்பரபவனி தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது.
இதில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். இன்று வெள்ளிக்கிழமை காலையில் பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலியும், புது நன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. பின்னர் திருமுழுக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. மாலையில் நற்கருணையாசிரை தொடர்ந்து கொடி இறக்கப்படுகிறது.
நிறைவு நாளான நாளை பொது அசனம் நடைபெறுகிறது.