ஒரே நாளில் 60 ஆயிரத்து 250 விண்ணப்பங்கள் பெறப்பட்டன
- கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முதற்கட்ட முகாம் நேற்று தொடங்கியது.
- இதற்காக கடந்த 20 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முதற்கட்ட முகாம் நேற்று தொடங்கியது. இதற்காக கடந்த 20 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அதில் விண்ணப்ப தாரர்கள் எத்தனை மணிக்கு முகாமிற்கு வர வேண்டும் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிவிக்கப்ப ட்டுள்ளது.அதன்படி முகாம் நடந்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நேற்று மக்கள் திரண்டனர். இதையடுத்து அவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர் பூர்த்தி செய்தனர். விரல் ரேகை பயோமெட்ரிக் மூலம் சரிபார்க்கப்பட்டது.விண்ணப்பங்களை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மொபைலில் உள்ள செயலியில் பதி வேற்றினர். சேலம் சிஎஸ்ஐ பாலி டெக்னிக் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதி வேற்றம் செய்யும் பணியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் 11 லட்சத்து 1861 ரேஷன் கார்டுகள் உள்ளன.இதில் முதல் கட்டமாக ஆறு லட்சத்து 138 காடுகளுக்கு டோக்கன், விண்ணப்பங்கள் வழங்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு ஆகஸ்ட் 4 வரை விண்ணப்ப பதிவு முகாம் நடக்க உள்ளது.முதல் நாளில் 846 முகாம்களில் 60 ஆயிரத்து 250 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டாவது நாளாக இன்றும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப் பட்டு வருகிறது. இதனை வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்கள்.