மேட்டூர் அணையை ஒரே நாளில் 7,216 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பூங்கா விற்கு சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் காவிரியில் ஆனந்தமாக நீராடி பூங்காவிற்கு சென்று பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு மகிழ்ந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இன்றி ஊஞ்சலாடியும், சறுக்கு விளையாடியும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் கார்களிலும், பஸ்களிலும், மோட்டார் சைக்கிள்களி லும் சுற்றுலா தளங்களுக்கு வந்ததால் மேட்டூர், கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று ஒரே நாளில் 7,216 சுற்றுலா பணிகள் மேட்டூர் அணை பூங்கா விற்கு வந்து சேர்ந்தனர். இதன் மூலம் பார்வை யாளர் கட்டணமாக ரூ.36 ஆயிரத்து 80 வசூல் ஆனது. அணையின் வலது கரை யில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 827 பேர் வந்து சென்றனர்.