உள்ளூர் செய்திகள்

கறிக்கோழி விலை 2 ரூபாய் உயர்வு

Published On 2023-10-03 09:40 GMT   |   Update On 2023-10-03 09:40 GMT
  • நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
  • புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை படிப்படியாக சரிந்து கடந்த வாரம் 97 ரூபாய்க்கு விற்பனையானது.

சேலம்:

நாமக்கல் மண்டலத்துக்கு உட்பட்ட நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை படிப்படியாக சரிந்து கடந்த வாரம் 97 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விலை மேலும் சரியும் என அசைவ பிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக கறிக்கோழி விலை உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து நேற்று 106 ரூபாய்க்கு விற்பனையானது.

இதைத் தொடர்ந்து இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் கறிக்கோழி கிலோவுக்கு மேலும் 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மேலும் 2 ரூபாய் அதிகரித்து 108 ரூபாயாக உயர்ந்தது. கறிக்கோழி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News