வாழப்பாடி அருகே ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு
- வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிழக்குக்காடு சாமியார் தோட்டத்தில் ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
- பால் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்க ளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி:
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிழக்குக்காடு சாமியார் தோட்டத்தில் ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இப்பண்ணையில் கறவைமாடுகள், இறைச்சி ஆடுகள், மீன் மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள், பசுந்தீவனம் மற்றும் விதைகள் உற்பத்தி, பால் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்க ளும் ஒருங்கிணைக்கப்
பட்டுள்ளது.
இந்த கூட்டுப்பண்ணை முறையில் கிடைக்கும் கூடுதல் வருவாய், தீவனம் மற்றும் கழிவு மேலாண்மை, எளிய முறை சந்தைப்படு த்துதல், எந்திரங்கள் மற்றும் தொழிலாளர் மேலாண்மை குறித்து, சேலம், புதுக்கோட்டை மற்றும் ராம நாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க உயரதிகாரிகள் குழுவி னர், நேரில் பார்வையிட்டு கலந்தாய்வு செய்தனர். கூட்டுப்பண்ணை முன்னோடி விவசாயி ஞான சேகரன் மற்றும் ஏத்தாப்பூர் உழவர் உற்பத்தி யாளர் நிறுவன தலைவர் ஜெயரா மன் ஆகியோரிடம், கூட்டுப் பண்ணையை நிர்வாக உத்திகள் குறித்து கேட்ட றிந்தனர்.
இதுகுறித்து சிங்கிபுரம் ஞானசேகரன் கூறுகையில், 'பல்வேறு பண்ணைகள், பல முன்னணி நிறுவனங்க ளின் வேளாண் அபிவிருத்தி கருவிகளை பார்வையிட்ட பிறகு, சிங்கிபுரத்தில் 5 ஏக்கர் தோட்டத்தில் ஒருங்கி ணைந்த கூட்டுப்பண்ணை அமைத்துள்ளேன். இதனால் செலவு குறைந்து கூடுதல் வருவாய்க்கு வழிவகை கிடைத்துள்ளது. மற்ற விவ சாயிகளும் ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை அமைக்க நிதியுதவியும் கூடுதல் வரு வாய் பெறுவதற்கு ஆலோ சனை வழங்க தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன் வர வேண்டும் என்றார்.