59 கல்வி நிலையங்களில் உள்ள 4,130 ஆசிரியர் பயிற்சி இடங்களுக்கு ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை
- 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன.
- 2023-2024-ம் கல்வியாண்டிற்கு ஒற்றை சாளர முறையில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடக்கிறது.
சேலம்:
தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்கீழ் 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன. இந்த 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 1830 இடங்களுக்கு நடப்பாண்டு 2023-2024-ம் கல்வியாண்டிற்கு ஒற்றை சாளர முறையில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் மாணவர் சேர்க்கை கையேடு ஆகியவை www.scert.tn.schools.gov.in என்ற இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2,300 இடங்கள்
அதே சமயம் கடந்த ஆண்டு 30 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர் சேர்க்கை செய்த நிறுவனங்களை தவிர்த்து, 33 உதவி பெறும் மற்றும் சுயநிதி பயிற்சி நிறுவனங்களில் உள்ள 2,300 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை செய்ய தகுதியுள்ளது. வருகிற 5-ந்தேதி இந்த நிறுவனங்களின் இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவுறுத் தியுள்ளார்.