உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த ஓவிரெட்டி-லட்சுமி.

சொத்தை அபகரித்து கொண்டு பெற்றோரை துரத்திய மகன்கள்எங்களை கருணை கொலை செய்யுங்கள்

Published On 2023-11-06 09:40 GMT   |   Update On 2023-11-06 09:40 GMT
  • ஓவி ரெட்டி, (வயது 82). இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
  • எனது 3 மகன்களுக்கு நிலத்தை சரிசம பாகங்களாகவும், எனக்கு 10½ சென்ட் நிலம் மட்டும் பாகங்களாக காண்பித்து எனது கையொப்பம் பெற்று பாகப்பிரிவினை பத்திரம் செய்து கொண்டனர்.

சேலம்:

மேட்டூர் அருகே குட்டப்பட்டி அம்மன் கோவிலூரை சேர்ந்தவர் ஓவி ரெட்டி, (வயது 82). இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

என் மனைவி லட்சுமிக்கு 65 வயதாகிறது. நரசிம்மன், வெங்கடாஜலபதி,கிருஷ்ண மூர்த்தி என 3 மகன்கள் உள்ளனர். குட்டப்பட்டி கிராமத்தில் 4.79 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்தை எனக்கு, மகன்களுக்கு என 4 பாகங்களாக பிரித்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மோசடி

இதற்காக மேச்சேரி சார்பதிவாளர் அலுவ லகத்துக்கு சில வருடத்திற்கு முன்பு என்னை அழைத்து சென்றனர். அங்கு எனது 3 மகன்களுக்கு நிலத்தை சரிசம பாகங்களாகவும், எனக்கு 10½ சென்ட் நிலம் மட்டும் பாகங்களாக காண்பித்து எனது கையொப்பம் பெற்று பாகப்பிரிவினை பத்திரம் செய்து கொண்டனர்.

10½ சென்ட் நிலத்தில் நான் குடியிருந்து வரும் நிலையில் அதில் உள்ள பழைய வீடு அவர்களுக்கு பாகமாக காண்பித்து என்னை மோசடி செய்துள்ளனர். பத்திரப் பதிவு செய்யும்போது படித்து பார்க்க வில்லை. எனது பாகத்தை சரிவர ஒதுக்கீடு செய்யாமல், அவர்கள் மட்டுமே பிரித்து கொண்டு என்னை மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து மேட்டூர் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தோம். கோட்டாட்சியர் விசாரணை நடத்தி மாதம் தோறும் எனக்கும், மனைவிக்கும் 3000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டனர்.

கருணை கொலை

இதையடுத்து வீட்டிற்கு வந்த எனது மகன்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். நான் பணம் தர முடியாது என மிரட்டுகின்றனர். தற்போது உணவுக்கு வழியில்லாமலும் மருந்து, மாத்திரை வாங்கக்கூட பணம் இல்லாமல் நானும், மனைவியும் அவதியுற்று வருகிறோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நாள்தோறும் உணவு அருந்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மருத்துவ செலவிற்கு பணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்களை கருணை கொலை செய்து விட வேண்டும்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.ஓவி ரெட்டி, (வயது 82). இவர் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Tags:    

Similar News