மாணவர்களுடன் அமர்ந்து உணவின் தரம் குறித்து கேட்ட கலெக்டர் கார்மேகம்
- தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
- சேலம் மாவட்டத்தில் 1,418 பள்ளி களில் இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த திட்டம் மாநிலம் முழுவதும் கடந்த 25-ந் தேதி விரிவு படுத்தப்பட்டது.
இதையொட்டி சேலம் மாவட்டத்தில் 1,418 பள்ளி களில் இந்த திட்டம் தற்போது செயல்ப டுத்தப்படுகிறது. இதன் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ-மாணவிகள் பயன் பெறுகிறார்கள். இதனால் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ள னர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றி யம் நெரிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் கலெக்டர் கார் மேகம் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். மேலும் ஓமலூர் ஒன்றியம் மாங்குப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ததுடன் ஊழி யர்களிடமும் கேட்டறிந்தார்.
ஆணைக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் கார்மேகம் அந்த பகுதியில் மாணவர்க ளுடன் அமர்ந்து உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் துணை கலெக்டர் தலைமையிலான அதிகாரி கள் திடீர் ஆய்வு செய்தனர்.