பேளூரில் புதுமண தம்பதிகள் விழிப்புணர்வு விழா
- வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான விழிப்புணர்வு விழா பேளூரில் நடைபெற்றது.
- இந்த விழாவிற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார்.
சேலம்:
வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான விழிப்புணர்வு விழா பேளூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி வரவேற்றார். பேளூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெற்றிவேல் மற்றும் செவிலியர்கள், புதுமணத் தம்பதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக கர்ப்பிணிகள், குழந்தை பிரசவித்த தாய்மார்கள், வளரிளம் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், இணை உணவுகள் குறித்தும் ஊட்டச்சத்து உணவு முறை குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் சாந்தி, பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், புதுமணத் தம்பதிகள் பலரும் கலந்து கொண்டனர்.