உள்ளூர் செய்திகள் (District)

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 7-ந் தேதி நடக்கிறது

Published On 2022-08-16 08:50 GMT   |   Update On 2022-08-16 08:50 GMT
  • சேலம் சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சுகவேனஸ்வரர் சொர்ணாம்பிகை அம்ம னுடன் அருள் பாலிக்கிறார்.
  • கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருப்பணிகள் முழுமையாக முடியும் தருவாயில் உள்ளது.

சேலம்:

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சுகவேனஸ்வரர் சொர்ணாம்பிகை அம்ம

னுடன் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

திருப்பணிகள்

இந்த கோவில் திருப்பணி செய்ய கடந்த 2018-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருப்பணிகள் முழுமையாக முடியும் தருவாயில் உளளது. இதையொட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி காலை 10.50 மணிக்கு மேல் 11.50 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகாகும்பாபிஷேகம்

அன்று காலை 10.50 மணிக்கு அனைத்து விமா னங்கள் மற்றும் அனைத்து ராஜகோபுரங்களுக்கும் சமகால மகா கும்பாபி ஷேகம்நடக்கிறது. 11.15 மணிக்கு சுகவேனஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபி ஷேகம் மறறும் மகா தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல், மாலை 4 மணிக்கு சொர்ணாம்பிகை சமேத சுகவனேஸ்வரருக்கு திருக்கல்யாணம், 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது.

இந்த விழாவில் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்க ளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News