உள்ளூர் செய்திகள் (District)

சேலம் வாழப்பாடியில் திருவண்ணாமலை முலாம் பழம் விற்பனை அமோகம்

Published On 2024-06-01 04:18 GMT   |   Update On 2024-06-01 04:18 GMT
  • பழச்சாறு தயாரித்து பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • குளிர்பானங்கள் அருந்துவதில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

வாழப்பாடி:

கோடைக்காலம் தொடங்கினாலே சுட்டெரிக்கும் வெய்யிலின் தாக்கத்தை தணித்துக் கொள்ள குளிர்பானங்கள் அருந்துவதில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான மக்கள் புட்டியில் அடைத்து விற்கப்படும் செயற்கை குளிர்பானங்களை வாங்கி பருகுவதை விட, இயற்கை பழச்சாறு அருந்துவதையே விரும்புகின்றனர்.

இதனால் கோடை காலத்தில் பழச்சாறு தயாரித்து அருந்துவதற்கேற்ற தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழங்களுக்கு இப்பகுதி மக்களிடையே ஆண்டுதோறும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

எனவே, திருவண்ணாமலை பகுதியில் அதிகளவில் விளைந்துள்ள முலாம் பழங்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், வாழப்பாடி பகுதி கிராமங்களுக்கு ஆட்டோக்களில் கொண்டு வந்து 4 கிலோ விலை ரூ.100 என விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த முலாம் பழங்களை மக்கள் விரும்பி வாங்கி பழச்சாறு தயாரித்து பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாழப்பாடி பகுதி கிராமங்களில் முலாம் பழங்கள் அமோகமாக விற்பனையாவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு முலாம் பழம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tags:    

Similar News