உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சமத்துவ பொங்கல் விழா

Published On 2023-01-09 09:17 GMT   |   Update On 2023-01-09 09:17 GMT
  • சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழர் மரபு கலையான சிலம்பகலையை பயிற்றுவித்து வருகிறார்.
  • புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி தினேஷ் இவர் தனது ஓய்வு நேரத்தில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழர் மரபுக் கலையான சிலம்பகலையை பயிற்றுவித்து வருகிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட கொரோனா தொற்று விடுமுறையில் ஏழை, எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களுக்கே சென்று சிலம்ப கலையை உண்மையான முறையில் இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.

இந்நிலையில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் மற்றும் பொதுநல அறக்கட்டளை இணைந்து புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.

சீர்காழியை சுற்றியுள்ள கீழச்சாலை, கேவரோடை, புத்தூர், கொள்ளிடம், பாதரக்குடி, முதலைமேடு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை 300 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் இணைந்து பொங்கல் வைக்கும் வைபவத்துடன் துவங்கிய விழாவில் சிலம்பாட்டம், ஒற்றைகம்பு, இரட்டைகம்பு, புளியாட்டம், வாள்வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளும், ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாநில அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட மாணவ, மாணவிகளுக்கு சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக், தீயணைப்பத்துறை அலுவலர் ரமேஷ், அரசு கல்லூரி பேராசிரியர் முனைவர்.சத்தியமூர்த்தி ஆகியோர் பங்கேற்று கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.

இவ்விழாவில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு மகிழ்சியுடன் கொண்டாடினர்.

Tags:    

Similar News