ஓட்டப்பிடாரம் அருகே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம்-கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
- சமுதாய நலக்கூடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
- தமிழர்களாக தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கக்கரம்பட்டி, வி.தளவாய் புரம் ஆகிய கிரா மங்களில் பாராளு மன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தில் தலா ரூ. 30 லட்சம் மதிப் பீட்டில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. ரூ. 30 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள புதிய சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசு கையில், வி.தளவாய்புரம் கிராமத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திய கிராமமாக உள்ளது. மனிதர்களில் ஏற்ற தாழ்வு இல்லை. அனைவரும் சமம். இதை உணர்ந்து கொண்டு மனிதர்களாக, தமிழர்களாக இந்த நாட்டின், தமிழ் நாட்டின் முன்னேற்றத்துக் காக பாடுபட வேண்டும் என்றார்.
விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் துணை தலைவர் காசி விஸ்வநாதன், குறுக்குச்சாலை பஞ்சாயத்து தலைவர் முனியம்மாள், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, தாசில்தார்கள் நிஷாந்தினி, கிருஷ்ணகுமாரி, கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஓட்டப் பிடாரம் அருகே உள்ள தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தில் புதிய பகுதிநேர ரேசன் கடையை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து பொருட்களை விநியோகம் செய்தார். அதில் சண்மு கையா எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர்.