திருவிடைக்கழி, சுப்பிரமணியசாமி கோவிலில் சோமவார 1008 சங்காபிஷேகம்
- ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாத திங்கள்கிழமையில் வரும் கிருத்திகை தான் சோமாவாரமாகும்.
- புனிதநீர் அடங்கிய 1008 சங்குகளால் மகாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா, திருவிடைக்கழி கிராமத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
பல்வேறு தல சிறப்புகளை உடைய இக்கோவிலில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதத்தில் திங்கள் கிழமையில் வரும் கிருத்திகை தான் சோமாவாரமாகும்.
அதைப்போல் நேற்று தை மாதமான கீர்த்திகை திங்கள் கிழமை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
நெல்லின் மேல் சங்குகள் வைக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு மா இலை பூ வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு ஹோமம் பூரனாகஹூதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட சங்குகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆலய வெளி மற்றும் உட்புர பிரகாரத்தினை வலம் வந்து சுப்ரமணிய சுவாமி மற்றும் பாவவிநாச பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய 1008 சங்குகளால் மகாபிஷேகம் நடைபெற்றது.
கோயில் அறங்காவலர் ஜெயராமன், செயல் அலுவலர் ரம்யா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
இந்நிகழ்சிகளை நெடுவாசல் மாணிக்கம் பிள்ளை வகையரா ஏற்பாடுகள் செய்தனர்.