உள்ளூர் செய்திகள்

தங்கப்பதக்கம் வென்ற மாணவர் கலையரசு.


சர்வதேச தடகளப் போட்டியில் சங்கரன்கோவில் மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை

Published On 2022-08-04 08:51 GMT   |   Update On 2022-08-04 08:51 GMT
  • நேபாள் இளைஞர் விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான தடகளப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.
  • நேபாள் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் மெர்லின் ஜோஸ் (10), ராகவ்கிருஷ்ணா (12) முகேஷ் (14) ஆத்தீஸ் (12) ஆகியோர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டி மாணவர் நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நேபாள் இளைஞர் விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான தடகளப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.

கடந்த மாதம் ஜூலை 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், ராமலட்சுமி தம்பதியரின் மகன் கலையரசு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நேபாள் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் மெர்லின் ஜோஸ் (10), ராகவ்கிருஷ்ணா (12) முகேஷ் (14) ஆத்தீஸ் (12) ஆகியோர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.

சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் பங்கெடுத்து மாணவர் கலையரசுவை ஏ.வி.கே. கல்வி குழும தலைவர் அய்யாத்துரைபாண்டியன், பயிற்சியாளர்கள் பிரவீன் குமார், பிரியா மற்றும் பெருமாள், ராமலட்சுமி, பூலித்தேவன் மக்கள் கழக மாநில தலைவர் பெருமாள்சாமி, மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக களும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News