சீர்காழியில், மரக்கன்றுகள் நடும் விழா
- மயிலாடுதுறை மாவட்ட கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
- சாலையோரம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி அருகே காவாலம்பாடி பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த யொட்டி 3000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மயிலாடு துறை மாவட்ட கோட்ட பொறியாளர் பாலசுப்பி ரமணியம் தலைமை வகித்தார்.
சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் சீர்காழி ஆனந்தி, மயிலாடுதுறை இந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி பொறியாளர் சசிகலா தேவி வரவேற்றார்.
இதில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்துக் கூண்டு வைத்தார்.
தொடர்ந்து சாலை ஓரம் 3000 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், தி.மு.க. அவைத் தலைவர் நெடுஞ்செழியன், ஊராட்சித் துணைத் தலைவர் சுதாகர் மற்றும் கட்சி பிரமுகர்கள் முத்தமிழ், பன்னீர்செல்வம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.