ராமதாஸ் பிறந்த நாளையொட்டி மரக்கன்று நடும் விழா
- தருமபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. எஸ்.பி வெங்கடேஸ்வரன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
- தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பசுமை தாயகம் சார்பில் இன்று 5000 மரக்கன்றுகள் நடப்படுகிறது.
தொப்பூர்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளான இன்று (25-ந் தேதி) பசுமை தாயக தினமாகவும், மரக்கன்றுகள் நடும் நாளாகவும் பா.ம.க.வினர் மற்றும் பசுமை தாயக அமைப்பினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தருமபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. எஸ்.பி வெங்கடேஸ்வரன் சாமிசெட்டிபட்டி கிராமத்தில் இன்று அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
அப்போது எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகலஹள்ளி ஊராட்சி சவுளூர் ஏரிக்கரையில் 20 வகையான பறவைகளுக்கு பலன் தரக்கூடிய மற்றும் நிழல் தரக்கூடிய 500 மரக்கன்றுகள் மற்றும் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யபட்டது. தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பசுமை தாயகம் சார்பில் இன்று 5000 மரக்கன்றுகள் நடப்படுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், பசுமை தாயக மாநில துணைசெயலாளர் மாது, மாவட்ட துணை செயலாளர்கள் தமிழரசன், சரவணன், தங்கதுரை, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, வெங்கடேஷ், முத்துகுமார், ராமசந்திரன், பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் அறிவு, ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் காமராஜ், பச்சாக்கவுண்டர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.