உள்ளூர் செய்திகள்

 சப்பர பவனி நடைபெற்றபோது எடுத்தபடம்.

உடன்குடி அருகே பத்திரகாளி அம்மன் கோவிலில் சப்பரங்கள் பவனி

Published On 2022-09-25 08:43 GMT   |   Update On 2022-09-25 08:43 GMT
  • புரட்டாசி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • 10-ம் திருநாளன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

உடன்குடி:

உடன்குடி அருகே கொட்டங்காடு பத்திரகாளி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெற்ற புரட்டாசி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று அம்மன், விநாயகர் சப்பரங்கள் பவனி நடைபெற்றது.இங்கு புரட்டாசி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10-ம் திருநாளன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து ஸ்ரீ பவளமுத்து விநாயகர், தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆகிய இரு சப்பர பவனி தொடங்கியது. ஊரில் உள்ள அனைத்து தெருபகுதிகளிலும் வலம் வந்த சப்பர பவனிக்கு வழிநெடுகிலும் மக்கள் நேமிசங்களைப் படைத்து வழிபட்டனர்.

சுமார் 24மணி நேரம் இரு சப்பரங்களும் ஊர் முழுவதும் சுற்றி கோவிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்பட்டு புரட்டாசி திருவிழா நிறைவு பெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா சுந்தரஉசன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News