உள்ளூர் செய்திகள் (District)

போதிய கழிப்பறை வசதியின்றி பள்ளி மாணவிகள் அவதி

Published On 2023-11-30 10:01 GMT   |   Update On 2023-11-30 10:01 GMT
  • தருமபுரி அருகே போதிய கழிப்பறை வசதியின்றி பள்ளி மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
  • மாணவிகள் பயன்ப டுத்தும் நாப்கின்கள் இல்லாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஜம்மண அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகும்பு வரை சுற்று பகுதிகளில் உள்ள 10-க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த சுமார் 260 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்த போதிய பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க படாததால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும் மாணவ, மாணவிகள் கழிப்பிடம் செல்லும் பகுதியில் சுகாதார மற்ற முறையில் புதர் மண்டி இருக்கும் நிலையில் விஷ ஜந்துக்கள் கடிக்கும் அபாயம் உள்ளது. மாணவிகள் பயன்ப டுத்தும் நாப்கீன்கள் இல்லாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்.பள்ளியில் பல்வேறு பராமரிப்பு வேலைகள் செய்யபடாமல் உள்ளதால் பள்ளியில் படிக்கும் கிராமப் பகுதி மாணவ, மாணவியர் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் அலட்சியமாக இருக்கும் பள்ளி நிர்வாகம் மீது கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News