- கனமழையால் அறுந்து தொங்கிய மின்கம்பி மாணவன் மீது உரசியது.
- பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஜலாலியல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் சலா வுதீன். இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவ ருடைய மனைவி நஜிபு நிஷா. இவருடைய மகன் முகமது முஜமில் (வயது 11). 6-ம் வகுப்பு மாணவன்.
சுல்தானா சலாவுதீன் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் முகமது முஜமில் தாயுடன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் இரவு 7 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் பட்டக்கால் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த முகமது முஜமில் ஜலாலி யல் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு தனது மிதிவண்டியில் வந்துள்ளார். அப்போது கனமழையால் அறுந்து தொங்கிய மின் கம்பி அவர் மீது உரசியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
இதனை தொடர்ந்து அக்கம்ப க்கத்தி னர் உடனடி யாக ஓடி வந்து சிறுவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வம னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மின் கம்பி அறுந்தது குறித்து மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்த தையடுத்து மின்சாரம் துண்டிக்கப்ப ட்டது. மருத்துவமனையில் முகமது முஜமிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகு தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.