உள்ளூர் செய்திகள்
ஆண்டிபட்டியில் பஸ் வசதி இன்றி தவிக்கும் பள்ளி மாணவ - மாணவிகள்
- பஸ் வசதி இல்லாததால் ஆண்டிபட்டி மற்றும் சக்கம்பட்டி பகுதிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
- நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இப்பகுதிகளில் இயக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக இயக்கி வந்த பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.
அதன்பின் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் ஆண்டிபட்டி மற்றும் சக்கம்பட்டி பகுதிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பஸ் வசதி இல்லாததால் ஆட்டோவிற்கு அதிக தொகை கொடுத்து சென்று வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதிகளில் இருந்து ஆண்டிபட்டிக்கு அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்களும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இப்பகுதிகளில் இயக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.