உள்ளூர் செய்திகள்

சேலம் கோட்டை அரசு பெண்கள் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி.

சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறப்பு

Published On 2022-06-13 09:04 GMT   |   Update On 2022-06-13 09:04 GMT
சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

சேலம்:

தமிழகம் முழுவதும் 1 முதல் 9 வரை படித்து வந்த மாணவர்களுக்கு கடந்த மாதம் 13-ந்தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து திட்டமிட்டபடி பள்ளிகள் இன்றுகாலை பள்ளிகள் திறக்கப்பட்டது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

சேலம் மாவட்டத்தில் 1,110 தொடக்கப் பள்ளிகள், 366 நடுநிலைப் பள்ளிகள், 136 உயர்நிலைப்பள்ளிகள், 159 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1771அரசு பள்ளிகளும் 123 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 504 தனியார் சுயநிதி பள்ளிகள் எனவும் மொத்தமாக 2398 அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டுகிறது. சேலத்தில் ஒரு சில தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி ஏற்கனவே அனைத்து பள்ளிகளிலும் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டது. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப் பட்டன. தொடர்ந்து வருகிற 20-ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கும் 27-ந் தேதி பிளஸ்- 1 மாணவர் களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News