பள்ளியில் அறிவியல் கண்காட்சி; கலெக்டர் பங்கேற்றார்
- குழந்தைகளுக்கான விளையாட்டு, கலையரங்கம், அறிவியல் கண்காட்சிகளை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
- கல்வி தான் ஒரு குழந்தைக்கு சரியான அணிகலன்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்து நீடூர் ஊராட்சி நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது.
இதில் எல்.கே.ஜி. குழந்தை களுக்கான ரப்பர் தரைத்தளம் கொண்ட விளையாட்டு அரங்கம் மற்றும் அறிவியல் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் இராமன் தலைமை தாங்கி னார். தனியார் கல்லூரி தலைவர் ஜாபீர் மற்றும் பர்வீன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பிரியா வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கம் மற்றும் கலையரங்கம், அறிவியல் கண்காட்சிகளை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது கலெக்டர் தன்னுடைய பள்ளிகால நிகழ்வுகளை எடுத்து கூறினர். ஆசிரியர்கள் மாணவர்களை தங்களுடைய சொந்த குழந்தைகள் போல் போற்றி அவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அதாவது ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் சமமாக நினைத்து அவர்களை வளர்க்க வேண்டும்.
கல்வி தான் ஒரு குழந்தைக்கு சரியான அணிகலன் எனவும் நன்றாக படிக்கவும், விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.
பிறகு மாநில அளவில் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்ற முகமது மோசின்க்கு நினைவு பரிசினை மாவட்ட கலெக்டர் வழங்கினர். பின்னர் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் மகேந்திரன், வி.ஏ.ஒ. பஞ்சநாதன், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொன்டனர். முடிவில் அறிவியல் ஆசிரியர் ரானிஸ் நன்றி கூறினார்.