உள்ளூர் செய்திகள்
நாளை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்வாங்கி காணப்பட்ட கடல்
- திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது.
- பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிவதும், சில நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதும் வழக்கம்.
இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) மாலையில் அமாவாசை தொடங்குகிறது. இதனால் வழக்கம் போல் நேற்று திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது.
2-வது நாளாக இன்றும் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாசிகள் படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. ஆனாலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.