சீர்காழியில் 400 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப்பை பறிமுதல்
- சீர்காழியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.
- விற்பனையில் ஈடுப்பட்ட 4 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1500 அபராதம் விதித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், டீ கப்புகள் விற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து நகராட்சி ஆணையர் வாசுதேவன் உத்தரவின்படி, சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, களபணி உதவியாளர் சீதாலெட்சுமி, இளநிலை உதவியாளர் நல்லதம்பி மற்றும் பரப்புரை மேற்பார்வையாளர்கள் ஆகியோர் சீர்காழி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப்பை விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்து கடைகள் மற்றும் குடோன்களில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழிப்பைகள், டீ கப்புகள் என சுமார் 400 கிலோ நெகிழிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விற்பனையில் ஈடுப்பட்ட 4 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1500 அபராதம் விதித்தனர்.
ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்று திடீர் அதிரடி ஆய்வு தொடரும் எனவும் கூறினார்.