உள்ளூர் செய்திகள்
குடோனில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்
- 20 கிலோ புகையிலை பொருட்கள், 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கல்.
- சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.
திருவையாறு:
தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ராவுக்கு வந்த புகாரின் பேரில் அவர் தலைமையில் அலுவலர்கள் சசிகுமார், பாலகுரு, சுப்பிரமணி, ரெங்கராஜன் ஆகியோர் போலீசார் உதவியுடன் திருவையாறு அந்தணர்குறிச்சியில் உள்ள ரெங்கராஜ் மகன் மகேஷ்வரன் (வயது 35) என்பவரது குடோனில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருட்கள், 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம் ஆகும். உடனே புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.