தொடர் தீ வைப்பு சம்பவம் ஜேடர்பாளையம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
- நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் 11-ந் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
- இந்த நிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு பகுதியைச் சேர்ந்த நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் 11-ந் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். இதைத்தொ டர்ந்து அப்பகுதியில் 2 பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
அதையடுத்து, வெல்ல ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடிசைக்கு தீ வைப்பு, வீடுகளுக்கு தீ வைப்பு, டிராக்டர்கள் எரிப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு என, அடுத்தடுத்து தொடர் சம்பவங்கள் அப்பகுதியில் நடைபெற்றதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த, 14-ந் தேதி, அதிகாலை சரளைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில் தூங்கி கொண்டிருந்த தொழிலா ளர்கள் 4 பேர் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
அதில், படுகாயம் அடைந்த 4 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதையடுத்து, அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரவி, பர மத்தி போலீஸ் நிலை யத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, சேலம் சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் (பொ) வழங்கி உள்ளார்.