தொடர் விடுமுறை எதிரொலி: குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாவிட்டாலும் அருவிகளில் தண்ணீர் ஓரளவுக்கு விழுந்து வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.
இந்நிலையில் வார விடுமுறையான நேற்றும், இன்றும் மற்றும் நாளை (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.
குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பல்வேறு அரிய வகை பழங்கள் குற்றாலம் அருவிக்கரைகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. அவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் பொழுதை கழித்து மகிழ்ந்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாவிட்டாலும் அருவிகளில் தண்ணீர் ஓரளவுக்கு விழுந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கேரளாவில் மழை அதிகரிக்கும்பட்சத்தில் தண்ணீர் வரத்தும் அதிகரிக்க கூடும். குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.