உள்ளூர் செய்திகள் (District)

போராட்டம் நடந்தபோது எடுத்த படம்

கடையம் அருகே பொதுமக்கள் மயானத்தில் குடியேறும் போராட்டம்

Published On 2023-03-09 08:55 GMT   |   Update On 2023-03-09 08:55 GMT
  • மேட்டூருக்குள் வேறு ஊர் பெயர் வைத்திருப்பதைக் கண்டித்து மேட்டூர் பகுதி பொதுமக்கள் நேற்று மாலை திடீர் என மயானத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.
  • போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் கடையம் பெரும்பத்து ஊராட்சியைச் சேர்ந்தது மேட்டூர் கிராமம். இங்குள்ள ெரயில்வே கேட் அருகில் சிலர் சபரி நகர் எனவும், வெய்க்காலிப் பட்டி எனவும் போர்டு வைத்துள்ளனர். இதனால் மேட்டூர் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மேட்டூருக்குள் வேறு ஊர் பெயர் வைத்திருப்பதைக் கண்டித்து மேட்டூர் பகுதி பொதுமக்கள் நேற்று மாலை திடீர் என மயானத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.

இப்போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து தகவலறிந்த தாசில்தார் ஆதிநாராயணன், கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 4 மணிநேரம் போராட்டம் நடத்திய பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் இன்று தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் இருதரப்பை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News