தேவதானப்பட்டியில் நிலத்தை மீட்க கோரி குடியேறும் போராட்டம்
- இந்த பஞ்சமி நிலத்ைத மீட்க கோரி தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை
- கம்யூனிஸ்ட்டு கட்சியினர், நில உரிமையா ளர்கள், பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொடைக்கானல் சாலையில் தனியார் நிறுவனம் பட்டியல் இன மக்களுக்காக வழங்கப்பட்ட 4 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் முறைேகடாக வீடு கட்டி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பஞ்சமி நிலத்ைத மீட்க கோரி தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காததால் தீண்டாைம ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் கம்யூனிஸ்ட்டு கட்சியினர், நில உரிமையா ளர்கள், பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊர்வலமாக சென்ற அவர்களை தேவதா னப்பட்டி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து சாமுவேல்ராஜ் கூறுகையில்,
தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களில் முறைகேடாக பட்டா பெற்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களை மீட்க வேண்டும். உரிய மக்களிடம் நிலத்ைத ஒப்படைக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளோம் என்றார்.