செங்கோட்டை- நெல்லை மின்சார ரெயிலுக்கு தென்காசியில் வரவேற்பு
- மின்சார ரெயிலின் டிரைவருக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. , தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
செங்கோட்டை- நெல்லை இடையே முழு நேர மின்சார என்ஜின் கொண்ட ரெயில் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இந்த ரெயிலுக்கு தென்காசி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. அவைத் தலைவரும், தென்காசி ரெயில் பயணிகள் நல சங்க தலைவருமான வெங்கடேஷ்வரன் தலைமையில் தென்காசி ரெயில் நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அப்போது மின்சார ரெயிலின் டிரைவருக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்து ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. , தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா, தென்காசி நகர் மன்ற துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா, தென்காசி நகர ம.தி.மு.க. செயலாளர் கார்த்திக், ரெயில் பணிகள் நல சங்கத் துணைச் செயலாளர் ஆனந்தபவன் காதர் மைதீன், தென்காசி நகர தி.மு.க. நிர்வாகிகள் அ.சேக்பரித், மைதீன், சன் ராஜா மற்றும் வக்கீல்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.