உள்ளூர் செய்திகள் (District)

தடகள போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

ஜூனியர் தடகள போட்டிகள் - வெற்றிபெற்றவர்களுக்கு கேடயங்கள்

Published On 2022-09-16 09:37 GMT   |   Update On 2022-09-16 09:37 GMT
  • இளையோர் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன.
  • முதல் நாள் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட தடகளச் சங்கம், தூத்துக்குடி தொழில் வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய இளையோர் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. போட்டிகள் 14 வயதுக்குடப்பட்டவர்கள், 16 வயதுக்குட்பட்டவர்கள், 18 வயதிற்குட்பட்டவர்கள், 20 வயதிற்குட்பட்டவர்கள் என நடைபெற்றன. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

பள்ளி கல்லூரிகளில் பயிலும் சுமார் 1500 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். முதல் நாள் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார். ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், என பல போட்டிகள் நடத்தப்பட்டன. 2 நாட்கள் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா ஜெனிட்டா வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தடகள சங்க செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் அருள் சகாயம், தூத்துக்குடி தொழில் வர்த்தக சங்க இணைச் செயலாளர் தீரமகாராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அக்டோபர் 2-வது வாரம் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News