ராசிபுரத்தில் சூறாவளி காற்றுடன் மழை
- ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை 3 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
- இந்த காற்றில் விளம்பர பலகைகள், புழுதி பறந்தன.
ராசிபுரம்:
கோடை வெயில், கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல முடியாத அளவிற்கு வாட்டி வதைத்தது. இந்த நிலையில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை 3 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
இந்த காற்றில் விளம்பர பலகைகள், புழுதி பறந்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். காற்று வீசிய சிறிது நேரத்தில் கனமழையும் பெய்தது.
மழையுடன் காற்று வீசியதால் ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்தன. அப்போது அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மின்கம்பங்கள் சாய்ந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். மழை பெய்ததன் காரணமாக மாலையில் குளிர்ந்த சீதோஷணம் நிலவியது.
அதேபோல் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, புதுப்பட்டி உள்பட பல்வேறு பகுதி களில் நேற்று மழை பெய்தது.