ரூ.10.50 கோடியில் பிரசவ சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு விரைவில் அடிக்கல்
- ரூ.10.50 கோடியில் பிரசவ சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்.
- ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமை ப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மாவட்ட சுகாதார பேரவை நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் அவர் பேசியதாவது:-
சிவகங்கை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சராசரியாக மாதந்தோறும் 400-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. இதை கருத்தில் கொண்டு இந்த வளாகத்தில் மருத்துவக் கட்டிடம் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைய உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் காணொலிக்காட்சி மூலம் விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை, சங்கராபுரம், வேலங்குடி ஆகிய பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கென நட வடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக சங்கராபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு தற்போது ஆணை வரப்பெற்றுள்ளது.
இதுதவிர அனைத்து நகர்ப்புறப்பகுதிகளிலும் சுகாதார கட்டமைப்புக்களை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம் மூலம் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய நகராட்சிப் பகுதி களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமை ப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட 3 நகராட்சிகளிலும் தலா ரூ.25லட்சம் மதிப்பீட்டில் சுகாதாரம் மற்றும் நல மையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. மானாமதுரை நகராட்சி பகுதியில் ரூ.1.25கோடி மதிப்பீட்டில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்ப தற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
சுகாதார கட்டமைப்பில் வட்டார அளவில் தலா ரூ.50லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ ஆய்வகங்கள் அமைப்பதற்காக பிரான்மலை, முத்தனேந்தல் ஆகியப்பகுதிகளில் அதற்கான கட்டிடங்கள் அமைக்கப்ப டவும் நடவடிக்கை கள் எடுக்க ப்பட்டுள்ளது.
துணை சுகாதார நிலையங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் மானாமதுரை ஆவரங்காடு பகுதியில் புதிய துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) தர்மர், துணை இயக்குநர்கள் விஜய்சந்திரன்(சுகாதாரப்பணிகள்), யோகவதி (குடும்ப நலம்), கவிதாராணி (தொழுநோய்), ராஜசேகரன் (காச நோய்), ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), சரவணமெய்யப்பன் (கண்ணங்குடி) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.