ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- இலவச தையல் எந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5000 மதிப்பிலான ஆடை தேய்ப்பு பெட்டி வழங்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது. பொது மக்களிடமிருந்து 351 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் வருவாய் துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரண காசோலை, 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.87 ஆயிரத்து 500- மதிப்பீட்டில் இயற்கை மரண உதவிதொகை காசோலைகள், முதல்-அமைச்சர் பொது நிவாரன நிதியின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகள், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5000 மதிப்பிலான ஆடை தேய்ப்பு பெட்டி, தொழிலாளர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.55 ஆயிரம் வீதம் விபத்து மற்றும் இயற்கை மரண உதவித் தொகை காசோ லைகள் என மொத்தம் 27 பயனாளி களுக்கு ரூ.15 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.