அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி
- அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் இப்பள்ளி 10-ம், 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பள்ளிக்கு எழுவன் கோட்டை, தெண்ணீர்வயல், உடப்பன்பட்டி, நாச்சியா புரம் கிராமங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பெரியகாரையில் இருந்து தேவகோட்டை நகர் பஸ் நிலையம் வரை பஸ் வழித்தடத்தில் செல்லும் நகர பஸ்சை முன்னாள் மாணவர் பூமிநாதன் முன்னிலையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி கொடி யசைத்து தொடங்கி வைத்தார் மேலும் பஸ்சின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை கவுரவித்து பள்ளி மாணவ- மாணவிகளுடன் அரசு பஸ்சில் பயணம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் சிங்காரவேலன், டிவிஷனல் மேனேஜர் தங்கபாண்டியன், தேவகோட்டை கிளை மேலாளர் சொக்கலிங்கம், பச்சைமால், பொறியாளர் மோகன், பேருந்து நிலைய பொறுப்பாளர் சந்தியாகு, ஊராட்சி மன்ற தலைவர் திருமணவயல் ராமையா, கண்ணங்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிலவிழிநாதன், அப்பச்சி சபாபதி, நகர தலைவர் இரவுசேரி சஞ்சய், சாமிநாதன், இளங்குடி முத்துக்குமார் மற்றும் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முதடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து நன்றி கூறினார்.