அ.தி.மு.க. சார்பில் சுதந்திர போராளி குயிலிக்கு மரியாதை
- அ.தி.மு.க. சார்பில் சுதந்திர போராளி குயிலிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
- சிவகங்கை நகர செயலாளர் ராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சுதந்திர போராட்ட பெண் போராளி குயிலியின் வீரத்தை போற்றும் வகையில் சிவகங்கை பையூர் பழமலை பகுதியில் வேலு நாச்சியார் நினைவிடத்தில் குயிலி நினைவு ஸ்தூபிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை யில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் குயிலி நினைவிட ஸ்தூபி யில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப் பட்டது. இதில் சிவகங்கை நகர செயலாளர் ராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், குணசேகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், பழனிச்சாமி, சிவாஜி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வமணி, சிவசிவஸ்ரீதர், ஜெயபிரகாஷ் சோனைரவி, கல்லல் செந்தில்குமார், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன், காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், மற்றும் மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து,தேவராஜ், பில்லூர் ராமசாமி, நகர் துணை செயலாளர் மோகன்,மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட பாசறை பொருளாளர் சரவணன், அமைப்பு சார அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாண வரணி அன்பு,சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் என ஏராளமான நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.