உள்ளூர் செய்திகள்

அமாவாசை சிறப்பு யாகம்

Published On 2022-09-25 08:27 GMT   |   Update On 2022-09-25 08:27 GMT
  • கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி சித்தர் கோவிலில் அமாவாசை சிறப்பு யாகம் நடந்தது.
  • முன்னோர்கள் தர்ப்பணம் திதி பூஜை இன்று காலை6மணிமுதல் பகல் 12 மணி வரை நடந்தது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுகோல் மாயாண்டி சுவாமி தவசாலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு உலகநன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது.

இதில் மருத்துவ குணமிக்க மூலிகைகள், பழங்கள், பட்டுவஸ்திரம் போன்ற பொருட்களை யாகத்தில் இட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. யாகத்தை புதுக்கோட்டை பனைய பட்டி ஞானிபுல்லான் சாதுவழிபாட்டு குழு செழியன் சுவாமி வேதமந்திரங்களை கூறி நடத்தினார்.

சிவகங்கை, மது ரை, புதுகோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு அன்னதானம் நடந்தது. இன்று காலை அமாவாசை சிறப்பு பூஜை மற்றும் சூட்டுகோல் மாயாண்டிசுவாமிக்கு அபிஷேக ஆராதனை- சிறப்பு அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம்சூட்டுகோல் மாயாண்டி சுவாமி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

இதேபோல் குறிச்சிகாசி விசுவநாதர் கோவிலில் முன்னோர்கள் தர்ப்பணம் திதி பூஜை இன்று காலை6மணிமுதல் பகல் 12 மணி வரை நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜை செய்து கங்கை தீர்த்தத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News