- இருசக்கர வாகன பயன்பாடு குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
- இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
சிவகங்கை
சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் இருசக்கர வாகன பயன்பாடு, அதன் அபரிமிதமான விளைவுகளை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் விளக்கினார்.
அவர் பேசுகையில், போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். வாகன நெரிசல் அதிகமாக உள்ள சாலையில் கூட வேகமாக செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
இதை தடுக்க தமிழக போக்குவரத்துத்துறை 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் சட்டப்பிரிவின்படி 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று எடுத்துரைத்தார்.
இதில் தலைமை ஆசிரியர் சிவமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், உதவி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.