48 இடங்களில் 140 கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு
- தேவகோட்டையில் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக 48 இடங்களில் 140 கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அதன்படி காமிரா அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய்-மகளை கொலை செய்து 60 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொலையில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தேவ கோட்டையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், குற்றவாளி களை கண்காணிக்கவும் போலீசார் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கும்படி வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து தேவகோட்டையில் 48 இட ங்களில் 140 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தப் பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் சாலையில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து கொ ள்ளை சம்பவம் நடந்தது. இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் ஆலோசனைபடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலையில், வர்த்தக சங்க தலைவர் காஜா ஏற்பாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தற்போது நகரில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வில்லை. இதனால் குற்ற சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்றும், எனவே நகர் பகுதிகளில் முதல் கட்டமாக 41 இடங்களில் 140 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று இன்ஸ்பெ க்டர் சரவணன் கேட்டுக் கொண்டார். அதன்படி காமிரா அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.