உள்ளூர் செய்திகள்

ஆல்பர்ட் ஆபிரஹாம்

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது துறைரீதியாக நடவடிக்கை

Published On 2022-07-19 08:47 GMT   |   Update On 2022-07-19 08:47 GMT
  • பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
  • நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனியார் செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு

85-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு 2 ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

இதை தொடர்ந்து நேற்று பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் மாணவிகளும், செவித்திறன் குறைவு டையோர் காதுகேளாதோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

மேலும் மாவட்ட மாற்றுதிறனாளி அலுவலர் கதிர்வேல் தலைமையில் பள்ளி மாணவ- மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆல்பர்ட் ஆபிரஹாம் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது ெதரியவந்தது. அதன்பேரில் ஆசிரியர் ஆல்பர்ட் ஆபிரஹாமை போலீசார் கைது செய்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சம்மந்தப்பட்ட இன்னொரு ஆசிரியரையும் கைது செய்யவேண்டும், தவறு செய்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News