உள்ளூர் செய்திகள் (District)

வீடு, வீடாக சென்று நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

தேவகோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

Published On 2023-10-07 06:00 GMT   |   Update On 2023-10-07 06:00 GMT
  • தேவகோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  • நகர்மன்ற தலைவர் கொசு மருந்து அடித்தார்

தேவகோட்டை

தமிழக அரசு தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை நகராட்சியில் டெங்கு தடுப்பு நடவ டிக்கையை நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையா ளர் தீவிரமாக எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ராம்நகர் 11 -வது வார்டு சஞ்சீவிபுரம், செந்தில்நகர் பகுதிகளில் டெங்கு பாதிப்புக்கான அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களின் வீடுகளில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கொசு மருந்து அடித்தார். ஆணையாளர் பார்கவி உடனிருந்தார்.

அந்த வீடுகளில் உள்ள நபர்களை மாவட்ட தொற்று நோய் தடுப்பு வல்லுநர் டாக்டர் கிருஷ்ண வேணி, நகராட்சி சுகாதா ரத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் பரிசோதனை செய்தனர். நகராட்சி பணி யாளர்கள் வீடு முழுவதும் கிருமி நாசினிகள் தெளித்து வீட்டின் உரிமையாளருக்கு டெங்கு பரவாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத் தினர். மேலும் நகரில் டெங்கு அறிகுறி ஏற்பட்ட நபர்கள் இருக்கும் பகுதி களில் காலை, மாலை இரு வேளைகளில் கிருமி நாசி னிகள் தெளிக்கப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி பணி யாளர்கள் நகர் முழுவதும் தீவிரமாக டெங்கு தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News