உள்ளூர் செய்திகள்

கல்லல் யூனியன் கம்பனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூ.111.97 கோடியில் வளர்ச்சி பணிகள்

Published On 2022-12-07 08:00 GMT   |   Update On 2022-12-07 08:00 GMT
  • கல்லல் யூனியனில் ரூ.111.97 கோடியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றி யத்தில் ரூ.111.97 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படு த்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மட்டுமின்றி, வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாகவும், அதன் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 14-வது நிதிக்குழு மானியம், 15-வது நிதிக்குழு மானியம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, எஸ்.ஐ.டி.எஸ்.திட்டம், ஒன்றிய பொது நிதி உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் 2019-2020-ம் ஆண்டில் மொத்தம் 865 பணிகள் ரூ.2584.29 லட்சம் மதிப்பீட்டிலும், 2020-21-ம் ஆண்டில் மொத்தம் 1,328 பணிகள் ரூ.3896.49 லட்சம் மதிப்பீட்டிலும், 2021-22-ம் ஆண்டு 1,910 பணிகள் ரூ.4716.63 லட்சம் மதிப்பீட்டிலும் என மேற்கண்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டப்பணிகள் தொடர்பாக, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தளக்காவூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.2.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் இணைப்புகள் பணிகள் தொடர்பாகவும், கம்பனூர் ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாயவிலைக்கடைக் கட்டிடம் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், 15-வது நிதிக்குழு மான்யத் திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தே க்கத்தொட்டி கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், என்.மேலையூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்றக்கட்டிடம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, இடம் தேர்வு செய்யப்படுவது தொடர்பாகவும் துறை சார்ந்த அலுவ லர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் -இணை இயக்குநர் சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், உதவித் திட்ட இயக்குநர் செல்வி, சிவகங்கை மாவட்ட செயற்பொறியாளர் வெண்ணிலா, தேவ கோட்டை உதவி செயற்பொ றியாளர் ஜெயராஜ், கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, அழகுமீனாள், உதவிப்பொறியாளர்கள் விஜயலெட்சுமி, செல்லையா, கணேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News