திருகூடல்மலை நவநீதபெருமாளை வரவேற்ற பக்தர்கள்
- மானாமதுைரயில் திருகூடல்மலை நவநீதபெருமாளை பக்தர்கள் வரவேற்றனர்.
- இரவு வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளினார்.
மானாமதுரை
மதுரை திருப்பரங்குன்றம் திருகூடல்மலை நவநீத பெருமாள் மானாமதுரை வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளும் வைபவம் நடந்தது. இதற்கான கடந்த 1-ந்தேதி திருகூடல் மலையில் இருந்து பல்லக்கில் சாமி புறப்பட்டார்.
ஆரப்பாளையம், கோரிப் பாளையம், அண்ணா நகர், வண்டியூர், திருப்புவனம், திருப்பாசேத்தி, முத்த னேந்தல், ராஜகம்பீரம் வழியாக மானாமதுரை வந்தடைந்தார்.மானாமதுரையில் மாரியம்மன் கோவில் தெரு, பழைய தபால் ஆபிஸ் தெரு, சுந்தர புரம் கடைவீதி , பட்டரைதெரு, வேளார் தெரு வழியாக குதிரை வாகனத்தில் புறப்பட்டு இரவு தாயமங்கலம் ரோடு அலங்கார் நகரில் உள்ள வைகை கரை அய்யனார் கோவிலில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா.... என கோஷமிட்டு அவரை வரவேற்றனர்.கோவிலில் சாமியை ஆரத்தி எடுத்து மஞ்சள் பட்டு சாற்றி வரவேற்றனர்.
அதை தொடர்ந்து நவநீத பெருமாள் மற்றும் கோவி லில் உள்ள அய்யனார், சோனையா , மகாசித்தர் கட்டிக்குளம் மாயாண்டி சித்தர் சன்னதிகளில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு முழுவதும் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் நவநீதபெருமாளை தரிசனம் செய்தனர். இன்று காலை சங்கு பிள்ளையார் கோவி லில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் 24 -ந்தேதி திருகூடல்மலை சென்ற டைவார்.