பெட்ரோல் குண்டு வீச்சில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி
- பெட்ரோல் குண்டு வீச்சில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வழங்கினார்.
- முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இளையான்குடி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இண்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் காரைக்குடி டாஸ்மாக் மதுபான கடையில் பணிபுரிந்தார். அப்போது கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீக்காயமடைந்த அர்ச்சுனன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இறந்த அர்ச்சுனனின் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அர்ச்சுனன் படத்திற்கு மாலை மரியாதை செலுத்தினார். தமிழக அரசு வழங்கிய ரூ.10 லட்சத்திற்கான காசோ லையை அர்்ச்சுனன் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
மேலும் முதலமைச்சர் அறிவிப்பின்படி அர்ச்சுனன் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மாறன், வெங்கட்ராமன், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.