உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான கல்விக்கடன் ஆணைகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கியபோது எடுத்தபடம். அருகில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் பலர் உள்ளனர். 

கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் ஆணை வழங்கல்

Published On 2023-09-06 07:08 GMT   |   Update On 2023-09-06 07:08 GMT
  • கல்லூரி மாணவர்கள் 39 பேருக்கு ரூ.2.57 கோடி கல்விக்கடன் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
  • தகுதியான மாணவர்களுக்கு கடன் அனுமதி உத்தரவுகளை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாண வர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்ட அளவில் இரண்டு சிறப்பு கல்வி கடன் முகாம் கள் நடத்திட திட்டமிடப்பட் டது. அதன் தொடக்கமாக சிவகங்கையில் சிறப்பு கல்வி கடன் முகாம் தொடங் கியது. இம்முகாமில் விண் ணப்பித்த மாண வர்களுக்கு, அந்தந்த வங்கிகளினால் அனுமதிக் கப்பட்டு அதன்படி நேற்றைய தினம் மொத்தம் 39 பேருக்கு ரூ.2.57 கோடி மதிப்பீட்டி லான கல்வி கடன் ஆணை–கள் வழங்கப் பட்டுள்ளது.

மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட 37 மா–ணவர்கள் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற் கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். தகுதி யான மாணவர்களுக்கு கடன் அனுமதி உத்தரவு களை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள் ளது. இதேபோன்று வருகின்ற 8-ந்தேதி அன்று காரைக்குடி கண்ணதாசன் மணி மண்ட பத்திலும் மா வட்ட அளவி லான சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது. எனவே தற்போது பயன் பெற்றுள்ள மாணவர்களும், தங்களை சார்ந்தோர்களிடம் எடுத்து ரைத்து, பயன்பெற செய்வ தற்கான நடவடிக்கை–களில் ஈடுபடவேண்டும்.

மேலும் கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள், இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு, வங்கிக்கடன்களை சரிவர செலுத்தி, சிறப்பாக பயின்று தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் சிவ கங்கை சுற்று வட்டா ரத்தில் இயங்கும் 18 வங்கி களின் மேலாளர்கள் கலந்து கொண்டு மாண வர்கள் சமர்ப்பித்த விண்ணப் பங்களை பெற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News