உள்ளூர் செய்திகள்

மினி மராத்தான் ஓட்டத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.அருகில் மாங்குடி எம்.எல்.ஏ, சேர்மன் முத்துதுரை உள்ளனர்

போதைபொருள் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம்

Published On 2022-08-14 09:08 GMT   |   Update On 2022-08-14 09:08 GMT
  • காரைக்குடியில் நடந்த போதைபொருள் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போதை ஒழியட்டும் பாதை மிளிரட்டும் என போதை பொருள் விழிப்புணர்வு மினி மாரத்தான் அழகப்பா பல்கலைக்கழக பவ நகர் மைதானத்தில் இன்று காலை நடந்தது.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமை தாங்கினார்.சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் பெரியகருப்பன் மினி மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பவநகர் ஸ்டேடியத்தில் இருந்து ஆரியவன், செக்காலை பேக்கரி, பெரியார் சிலை வழியாக கண்ணதாசன் மணிமண்டபத்தில் முடி வடைந்தது. கலந்து கொண்ட வர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் பெரியகருப்பன், நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வழங்கி னர்.

இதில் சார் ஆட்சியர் பிரபாகரன், முன்னாள் அமைச்சர் தென்னவன், சாக்கோட்டை சேர்மன் சரண்யா செந்தில்நாதன், பேரூராட்சி சேர்மன்கள் ராதிகா, சங்கீதா, கார்த்திக்சோலை, அழ கப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்புகுழு உறுப்பினர்கள் சுவாமி நாதன், கருப்புச்சாமி, மாவட்ட இளைஞரணி அமை ப்பாளர் செந்தில்குமார், நகர்மன்ற ஆணை யாளர் லட்சுமணன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஓடினர்.காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News