நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம்-விவசாயிகள் அறிவிப்பு
- நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
- தமிழக அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.
சிவகங்கை
தமிழக அரசால் கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தினை திரும்ப பெறக் கோரி சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் மாவட்ட கவுரவத்தலைவர் ஆதிமூலம் தலைமையில், விவசாயிகள் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு 100 ஏக்கர் தொடர்ச்சி யாக பெற வழிவகை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் பொது பயன் பாட்டில் உள்ள நிலங்கள், குளம், கண்மாய், நீர்வழிப் பாதைகள், வழிபாடு தலங்கள் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதுடன், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாகவும், மேலும் தமிழக ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.