- 4 கோவில்களில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.
- ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் விட்டனேரி கொல்லங்குடி வெட்டுடையார் காளி யம்மன் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இந்து சமய சிவகங்கை மண்டல இணை ஆணையர் பழனிகுமார் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
மணமக்களுக்கு ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் குத்துவிளக்கு பீரோ, தலையணை, சமையல்பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், பொதுக்குழு உறுப்பினருமான ஏஆர்.ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எம். கென்னடி, யோக கிருஷ்ண குமார், ஆரோக்கியசாமி, கொல்லங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மெய்ஞான மூர்த்தி, மாணவர் அணி கார்த்தி, பால்பாண்டி, குட்டி, தமிழ்ச்செல்வன், சுசீந்திரன், வழக்கறிஞர் சதீஷ், செல்லப்பாண்டி, பாலமுருகன், அசோக், முருகன், அல்லூர் ரவி, காளை மணி, அம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் கோவில் செயல் அலுவலர் நாராயணி நன்றி கூறினார். தாயமங்கலம் முத்துமாரி அம்மன்கோவிலில்ஒரு ஜோடிக்கும், அரியக்குடி திருவேங்கடம் உடையார் கோவிலில் 3 ஜோடி களுக்கும், பரமக்குடியில் திரவுபதி அம்மன் கோவிலில் 3 ஜோடிகளுக்கும் மொத்தம் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
அரியக்குடி திருவேங்கடமுடையார் கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் மாங்குடி எம்.எல்.ஏ., காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணைத் தலைவர் குணசேகரன், கண்ணன், காரை சுரேஷ் அறங்காவலர் குழு உறுப்பினர் வெள்ளையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.